காஞ்சிபுரம், ஜன. 22 –

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார்.  தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வந்தது

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கடந்த 25 ஆண்டுகளாக அவர் ஆக்கிரமித்து வந்த இடத்தை போலீசார் பாதுகாப்புடன் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு 5 கோடி என தகவல் தெரிவித்தனர்.

மதுரமங்கலம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்து வந்ததை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாச்சியர், மற்றும் வட்டாட்சியர் வருவாய்துறையினர் 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் மீட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என 42 வழக்குகள் தொடர்புடையவர் மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வந்த 300 கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை மீட்கப்பட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here