திருவண்ணாமலை, ஜன. 8 –

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்  கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும், செய்யார் ஊராட்சி ஒன்றியம், பெருமாந்தாங்கல் ஊராட்சியில் திறந்த வெளி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, செய்யார் ஊராட்சி ஒன்றியம், வடமணப்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாரியநல்லூர்  ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.25 இலசட்ம் மதிப்பீட்டில் குறுங்காடுகள் அமைத்தல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், செய்யார் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.327.43 இலட்சம் மதிப்பீட்டில்  ஏனாதவாடி – செங்கட்டான்குண்டில் சாலையில் நடைபெற்று வரும் பணிகளையும், ரூ.333.72 இலட்சம் மதிப்பீட்டில் கிளியாத்தூர் – இருமந்தாங்கல் சாலையில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தோம். அதை ஒரு கொரோனா மையமாக உருவாக்குவோம். அதன் பக்கத்தில் ஆயுஷ் சித்தா மருத்துவ மையத்தினையும் கோவிட் மையமாக ஆரம்பிக்கிறோம். இரண்டும் சேர்;த்து 300 படுக்கை வசதிகளை கொண்ட மையமாக ஏற்பாடு செய்திருக்கிறோம். அடுத்து, கூடுதலாக, செய்யாறில், 500 படுக்கை வசதி கொண்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளோம். இந்த மையத்தை நாளை மதியம் முதல் செயல்பட பணிகள் மேற்கொண்டுள்ளோம். மாவட்டத்தில் தினசரி 32-40 நபர்களுக்கு கொரோனா தொற்று தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. இப்போது பரவி வரும் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இரண்டும் சேர்ந்து, இன்னொரு உருமாறிய கொரோனா தான். தற்போதுள்ள கொரோனா வீரியம் குறைந்ததாக உள்ளது. ஆனால் பரவும் தன்மை அதிகமாக உள்ளது. இந்த உருமாறிய கொரோனா 10 நபர்கள் பரவும் இடத்தில், 100 நபர்களுக்கு பரவுகிறது. இப்பொழுது ஒருவர் தும்மினால் கூட இங்கே, இருக்கும் எல்லோருக்கும் பரவும் நிலையில் உள்ளது. ஆய்வில் ஜனவரி 18, 19-க்குள் தினசரி 450 நபர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவும் என்று தெரிவித்துள்ளார்கள். திருவண்ணாமலையில் முதற்கட்;டமாக, பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் வரும் 11-ந்தேதி முதல் தனியாக பிரித்து வைப்பதற்காக சம்மந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து பேசி எற்பாடு செய்ய வேண்டும். தற்போது பண்டிகை வருவதால், கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தினாலே தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தி, குறைத்து விடலாம். தற்போது வரை மாவட்டம் முழுவதும் 114 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளார்கள். இது தற்போது குறைவாக இருந்தாலும், வருங்காலத்தில் நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் குறைவாக இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலை தடுக்க, எல்லோருக்கும் ஆய்வுகூட்டம் நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லா பிற்காகளுக்கும் கண்காணிப்பு அலுவலரை நியமித்து, வருவாய் அலுவலர், ஊராட்சி அலுவலர், காவலர்களை நியமித்து முகக்கவசம் அணியாதவர்களையும், கடையில், பேருந்து நிலையங்களில், பொது இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களை அறிந்து கடையை மூடவதற்கு, ஏற்பாடு செய்திருக்கிறோம். நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனியார் பேருந்துகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்தோம். திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு, ஆரணி பகுதிகளில் கொரோனா தொற்று விகிதம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, வெம்பாக்கம் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. திருவண்ணாமலை, தண்டராம்பட்டு பகுதிகளில் கொரோனா தொற்று குறைவாக இருக்கிறது.  மாவட்ட எல்லை பகுதியில் வரக்கூடிய வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகு தான் அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தற்போது முதல் தவணை தடுப்பூசி 91 சதவிகிதம், இரண்டாவது தவணை தடுப்பூசி 67 சதவிகிதமும், மாவட்டத்திலுள்ள 1,13,800 சிறார்களில் 74.5 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி, நமது மாவட்டத்தில் தான் சிறார்களுக்கு அதிகமான தடுப்பூசி செலுத்தி முன்னிலையில் உள்ளது. நமது மாவட்டத்தில் தான், அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். தடுப்பூசி செலுத்த வேண்டிய எண்ணிக்கையும், நமது மாவட்டத்தில் தான் அதிகம் உள்ளது. பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவது முழுமையடைந்துள்ளது. தற்போது, பாலிடெக்னிக், ஐவுஐ விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்களிடம்; தடுப்பூசி செலுத்துவதற்காக சொல்லி வரவைக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு படித்தவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கும், தடுப்பூசி செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 10-ந்தேதிக்கு மேல் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட ஆரம்பிக்கிறார்கள். அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட இருக்கிறார்கள். கொரோனா நோயால் பாதிக்கபட்டோர்களை கண்டறிந்து, யாருக்கு என்ன வேண்டும் என அறிந்து, வீட்டில் தனிமைபடுத்துவதா அல்லது மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டுமா, என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. நாளை கொரோனா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் எல்லாம் சீரமைக்கப்பட வேண்டும். எல்லா மாவட்டத்திலும், திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. அதில் மூட்டைகளை எடுத்து செல்லும் போது, சிந்தாமல், சிதராமல் எடுத்து செல்ல வேண்டும்.  அனைத்து இருப்புகளும் 10 நாட்களில் அப்புறப்படுத்தப்படும் என்று துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 16000 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. ஒரு நாளைக்கு 2000 மெட்ரிக் டன் எடுத்து செல்கின்றனர். அதன்படி, அதிகபட்சமாக 10 முதல் 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்தப்படும். அடுத்து, சம்பா பருவம் அறுவைக்கு தயாராக உள்ளது. ஜனவரி 11-ந்தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். முதற்கட்டமாக, 54 நேரடி நெல் கொள் முதல் நிலையைம் திறக்கப்படும். அதிகமாக வரும்பட்சத்தில், மேலும், 40 நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படும்.  மொத்தமாக 94 நேரடி நெல் கொள் நிலையம் திறக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணி 06.01.2022 முதல் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. அதற்கான பயிற்சி கிராம நிர்வாக அலுவலருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 1,45,000 மெட்ரிக் டன் அளவு வரைக்கும் நெல்களை கொள்முதல் செய்யலாம். இதில் 7 திறந்த வெளி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. அதில் நம்மிடம் இருப்பு 40,000 மெட்ரிக் டன் உள்ளது. அதுவும், விரைவில் அரவைக்கு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் செய்யார் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பிரியா ராஜ், தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் குணசேகரன், செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், மருத்துவ துறை அலுவலர்கள்;, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here