சென்னை, டிச. 30 –
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் திருப்போரூர் இடையே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதே தனியார் கல்லூரியில் பணிபுரியும் செந்தில் என்பவர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
22 வயதான அந்த கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனக்கு தொந்தரவு கொடுத்து வந்த செந்தில் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஏற்கனவே திருமணமான நீங்கள் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று கேட்டபோது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவியும் அவரது நண்பரும் சேர்ந்து செந்திலை சரமாரி வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
கொலை செய்து விட்டு கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றுள்ளனர். சம்பவ நிகழ்வின் போது, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைதான 22 வயதான மாணவி அவருடைய ஆண் நண்பர் இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் ஏற்கனவே திருமணமான செந்தில் என்பவர் , கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த மாணவி அவருடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தாகவும் அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக தெரிய வருகிறது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இக் கல்லூரி மாணவி ஏற்கனவே செந்தில் பணிபுரிந்து வந்த எஸ்.ஆர்.எம் எனும் தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் செந்திலுக்கு திருமணம் ஆனது தெரிய வந்த போது செந்திலை காதிலிப்பதை துறந்து விட்டதாகவும், பின்பு அக் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு Phd படிக்க கேளம்பாக்கம் அருகே உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வருகிறார். மாணவி அக் கல்லூரியில் படிப்பதை தெரிந்து கொண்ட செந்தில் தான் பார்த்து வந்த கல்லூரியிலிருந்து நின்று விட்டு, அம்மாணவி படிக்கும் அக்கல்லூரியில் பணிக்கு சேர்ந்துள்ளார். செந்திலுக்கு திருமணம் ஆனது தெரிய வந்த பிறகு அம் மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், செந்தில் திருமணம் செய்துக்கொள்ள தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததால் மாணவியும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து திட்டம் தீட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.



















