கும்பகோணம், டிச. 30 –
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமேற்பு விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரும் இக்கல்லூரி முன்னாள் மாணவருமான, முனைவர் ம செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2018-19ல் கல்லூரி கல்வியை நிறைவு செய்த, 719 இளநிலை மாணாக்கர்களுக்கும், 361 முதுநிலை மாணக்கர்களுக்கும், 74 ஆய்வியல் நிறைஞர்களுக்கும் பட்டங்கள் வழங்கினார்.
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), 167 ஆண்டுகள் தொன்மையான இக்கல்லூரியில் மொத்தம் 17 துறைகள் உள்ளது. இவற்றில் 12 துறைகளில் ஆய்வுத்துறைகளும் உள்ளது என்பது பெருமைக்குரியது, வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரி, கணிதமேதை ராமானுஜன், தமிழ் தாத்தா உ.வே.ச, தென்கச்சி கோ.சுவாமிநாதன், இந்து கஸ்தூரிரங்கன், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் முன்னாள் இந்நாள் மத்திய மாநில அமைச்சர் பெருமக்கள் என பலர் கல்வி பயின்ற சிறப்பும் கொண்ட இக்கல்லூரியில், இன்று 2018-19ம் ஆண்டுகளில் கல்லூரி கல்வியை நிறைவு செய்த, மாணாக்கர்களுக்காண பட்டமேற்பு விழா இன்று கல்லூரி அண்ணா கலையரங்கில், கல்லூரி முதல்வர் க துரையரசன் தலைமையில் நடைபெற்றது இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் ம செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்புரையாற்றி, பல்கலைக்கழக தரவரிசையில் முதுவணிகவியலில் முதலிடம் பெற்ற மாணவி எம் அபினயாவிற்கு பட்டம், பதக்கமுடன், ரூபாய் 5 ஆயிரம் ரொக்க பரிசும், 3ம் இடம் பெற்ற தாவிரவியல்துறை மாணவி துர்காதேவி, மற்றும் புவியியல் துறை மாணவி புவனேஸ்வரி ஆகியோருக்கு பட்டம், பதக்கமுடன் தலா ரூபாய் 2 ஆயிரம் ரொக்க பரிசும் முதலில் வழங்கி தொடர்ந்து, 719 இளநிலை மாணாக்கர்களுக்கும், 361 முதுநிலை மாணக்கர்களுக்கும், 74 ஆய்வியல் நிறைஞர்களுக்கும் பட்டங்களையும், 685 மாணவியர்களும், 469 மாணவர்களுக்கும் என மொத்தம் 1154 பேருக்கு வழங்கினார் மாணாக்கர் பட்டமேற்பு விழாவில், பங்கேற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ம செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து விரைவில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை உருவாக்கப்படும் என்றும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே உள்ள பாடதிட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் புதிய பாட திட்டங்கள் குறித்த கருத்துருக்களையும் வரவேற்கிறோம் என்றும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், உள்ள மரையன் பயோ டெக் ஆய்வு கூடம் உலக அளவில் 7வது இடம் பெற்றுள்ளது என்றும் அதுபோலவே, பிரஸ் வாட்டர் சைன் பேக் ஆய்வு கூடமும் இந்திய அளவில் 2வது இடம் பெற்றுள்ளது பெருமைக்குரியது, இதே கல்லூரியில் 1972-73ல் மாணவர் என்றும், அதிக அளவில் மேலாண்மை கல்வி மற்றும் பல்வேறு அறிவியல் துறை மாணாக்கர்களும் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுகிறார்கள் என்றும் துணை வேந்தர் ம செல்வம் மேலும் தெரிவித்தார்.