கும்பகோணம், டிச. 29 –
கும்பகோணம் அருகே ஏரகரம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் விவசாயிகள் என கோரிக்கை விடுத்தனர்.
கும்பகோணம் அருகே ஏரகரத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது, திருவுருவப் படத்திற்கு ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து மலர்கள் தூவி மலரஞ்சலி செலுத்தினர். அப்போது நம்மாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை வாங்குவதற்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் மாமுல் ( லஞ்சம்) வாங்குகின்றனர். இது ஆண்டு தோறும் 450 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சமாக பெறப்படுகிறது. என குற்றம்சாட்டினார். எனவே சிபிஐ, மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இது குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் உழவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.





















