கும்பகோணம், டிச.28-

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிட அனுமதிக்க வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்டம் கோரிக்கை ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அமைக்க 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம்.  இந்நிலையில், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ​​நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என, திமுக அறிவித்தது, இச் செய்தி கும்பகோணம் மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  தற்போது அமைந்துள்ள திமுக வின் சீரிய தலைமையின் கீழ் செயல்படும் அரசு,

கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டி அது குறித்த மனுவை தஞ்சைக்கு வரவிருக்கும் முதல்வரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை வழங்கிட விரும்புகிறது.  அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதுக் குறித்த மனுவை அரசு கொறடா கோவி.செழியன், பாரளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை போராட்ட ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்டச் செயலாளர். எஸ். கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் அளித்தனர். மேலும் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டமாக ஏற்படுத்தித்தர முதலமைச்சரிடம் வலியுறுத்தவும் கோரிக்கை வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here