அம்மையார்குப்பம், டிச. 28 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது,
இத்தொட்டியில் இருந்து அப்பகுதியில் குடியிருக்கும் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மேல்நிலை தொட்டி ஊராட்சி நிர்வாகத்தால் சரிவர பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், அத்தொட்டியில் இருந்து பைப் மூலம் விநியோகம் செய்யப்படும் பைப்பில் பொருத்தப்பட்டுள்ள பைப் லைன் கேட் வால்வு பழுதுப்பட்ட நிலையில் உள்ளது. என்றும், அதனால் அதில் இருந்து வெளியேறும் குடிநீர் வீணாக வெளியேறி அப்பகுதியில் உள்ள தெருவில் வடிந்தோடுவதாகவும், அந்நீரில் பாசிப்படிந்து நோய்தொற்று ஏற்படும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர். மேலும், அப்பகுதியில் மக்கள் கூடும் சந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு பழுதுப்பட்ட பைப் லைன் கேட் வால்வை பழுது அல்லது மாற்றி குடிநீரை சேமிக்க வலியுறுத்துகின்றனர். மேலும் குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை தொட்டியை பிளீச்சிங்க் பவுடர் கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் நிறைந்த குடிநீரை வழங்கும் படியும் கோரிக்கை வைக்கின்றனர்.



















