கும்பகோணம், டிச. 26 –
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு கொரோனா நிவாரண வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணத்தில் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் பொதுக்குழுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செயலாளர் இளங்கோவன் பொருளாளர் அருள் சிறப்பு அழைப்பாளர்கள் சுகி வாசுதேவன் ஜூம் ஆயில் மேலாளர்கள் சண்முகம் ரமேஷ் உள்ளிட்ட இருசக்கர மோட்டார் வாகன பழுதுநீக்குவோர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களைக் அச்சுறுத்தக் கூடாது, சாலை பாதுகாப்பு சட்டம் மறு வரைவு செய்யப்பட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இன்றி தமிழகம் முழுவதும் இருக்கும் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் குடும்பத்திற்கு தமிழக அரசு கொரோனா நிவராண நிதி வழங்க வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொண்ட வாகனம் மோட்டார் பழுதுபார்ப்போர் சங்க உறுப்பினர் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.