மதுரை, டிச. 23 –
மதுரையில் நேற்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் அனைத்து மத தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை மேல அனுப்பானடி, கலங்கரை, தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு காலனி பகுதியில் உள்ள ஏ.ஜி. கிறித்துவ ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். பூமிநாதன் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக அரபிக் கல்லூரி தலைவர் ஹாஜி சபூர் மொகைதீன், சிவனடியார் ராஜ்குமார், அருட் சகோ லெத்திஸியா மேரி, சகோ ரஞ்சன் ஆகியோர் வருகைப் புரிந்து இவ்விழாவில் பங்கேற்று மத சமத்துவ நல்லெண்ண உரை நிகழ்த்தினார்கள். பின்பு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சமத்துவ மத தலைவர்கள் பகிர்ந்துண்டனர். நிறைவாக ஏழை எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இவ் விழாவில் வழங்கப்பட்டது. இதில் அப்பகுதி அனைத்து மத பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் துறைச்சார்ந்த அலுவலர்கள் வியாபாரிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இத்திருவிழா நிகழ்ச்சி பெரும் விமர்சியாக கொண்டாடப்பட்டு நிறைவடைந்தது.
















