கும்பகோணம், டிச. 21 –
கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், தற்போது குடிநீர் குழாய் பதிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரி ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவர் கலியமூர்த்தி ஊராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா. தர்ணாவில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சி மன்றத்தில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது இந்திரா குடியிருப்பு திட்டத்தில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பதால் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், தற்போது ராதிகா ரமேஷ் (பா.ம.க) என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் தரமற்ற குடிநீர் குழாய்களை பதித்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே இந்த ஊராட்சி மன்றத்தை கலைக்க வேண்டுமென வலியுறுத்தி கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று காலை தர்ணா போராட்டத்தில் புத்துார் ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர் சத்தியவள்ளி என்பவரின் கணவர் கலியமூர்த்தி தனி ஒருவராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவரை கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.





















