கும்பகோணம், டிச. 13 –

கும்பகோணம் அருகே மத்தியார்சுனம் என போற்றப்படும் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் அதனை தொடர்ந்து லட்சதீபம் ஏற்றும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது, இதில் திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 250 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவு சோமவாரத்தில் லட்சதீபம் ஏற்றும் வைபவம் இத்தலத்தில் நடைபெறுகிறது என்பது சிறப்பு ஆகும்.  

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நான்கு திசைகளிலும் சிவதலங்கள், நான்கு வீதிகளிலும் சிவன் கோயில்களுக்கும் நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்;டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகும்.

 இத்தலத்தில் சந்திரன் விநாயக பெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட முனிவர்களுக்கும், இறைவன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் காட்சியளித்துள்ளார் வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி தனியே ஆடல்வல்லான் மண்டபத்தில் உள்ளது .

இது காசிக்கு நிகரான தலமாகும் என வரலாறு கூறுகிறது. இத்தலத்தை பட்டினத்தார், அருணகிரிநாதர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல அடியார்கள் போற்றி  பாடியுள்ளனர். மேலும், இது பத்திரகிரியார் முத்தி பெற்ற தலமாகும். 1755ம் ஆண்டு முதல் இத்தலத்தில் கார்த்திகை நிறைவு சோமவாரத்தில் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடந்து வருகிறது. என்பது, வரலாறு இதனை நினைவுபடுத்தும் வகையில் விளக்குடன் கூடிய பாவை சிலை இத்தலத்தில் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பு பெற்ற சைவத்திருத்தலத்தில் கார்த்திகை நிறைவு சோமவாரத்தை முன்னிட்டு, 1008 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, வரிசையாக அடுக்கி வைத்து, உதரி பூக்கள் சாற்றி, சந்தன குங்கும பொட்டு வைத்து, வேத மந்திரங்கள் ஜபித்தபடி, ஹோமம் வளர்த்து, பூர்ணாஹ_திக்கு பிறகு நாதஸ்வர மேள தாளம் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் பிரகார புறப்பாடும் அதனை தொடர்ந்து மகாலிங்கசுவாமிக்கு, 1008 சங்காபிஷேகமும், அதனை தொடர்ந்து கலசாபிஷேகமும் நடைபெற்றது பின்னர் திருக்கோயில் வளாகம் முழுவதும் லட்சதீபம் ஏற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார்,      லட்சதீப வைபவத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் சன்னதி, பிரகாரங்கள், முன்மண்டபம், நந்திமண்டபம், என கோயில் வளாகம் முழுவதும் தீபவொளியால் பிரகாசமாக மின்னி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடதக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here