கும்பகோணம், நவ. 7 –

கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்து வரும் 74 வயது முதியவர் வீட்டில் அவர் உடல்நலம்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 36 சவரன் நகைகள் (292 கிராம்) கொள்ளையடித்து சென்றுள்ளனர். அது தொடர்பாக்காவல் நிலையத்தில் அவர் புகாரின்பேரில் விசாரணை நடத்தி ஒரே நாளில் நகைகளை மீட்டு இருவரை கைது செய்து நடவடிக்கையை போலீசார் மேற் கொண்டுள்ளனர்.

கும்பகோணம் அஞ்சுகம் நகரில் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீராசாமி ( 74) என்பவர் வசித்து வருகிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த நவ 3 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பிவுள்ளார்.

 

நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டியிருந்ததால் நகைகளை எடுப்பதற்காக நகைப் பெட்டியை பார்க்கும் போது அதில் நகைகள் இல்லாத தைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீராசாமி மற்றும் அவரது மகள் கும்பகோணம்  தாலுகா காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் அளித்தனர்.

 கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று காலை நகைகள் காணாமல் போன அஞ்சுகம் நகரில் உள்ள வீராசாமி வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், இவரது வீட்டின் ஒரு பகுதியில் முன்பு குடியிருந்த நபர்கள் மீது சந்தேகம் வர, காவல்துறையினர் அவர்களை தேடி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் பல்வேறு உறவினர்களிடம் திருடப்பட்ட நகைகளை பிரித்துக் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 292 கிராம் தங்க நகைகள் (36 சவரன்) பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாமரைச்செல்வி மற்றும் அவரது உறவினர் பாலாஜி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here