கும்ப கோணம், அக். 9 –
கும்பகோணம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது,
மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேத ஜெகந்நாதப்பெருமாள் வெள்ளி கவசமுடன் கூடிய விசேஷ மலர் அலங்காரத்திலும், உற்சவர் பெருமாள், திருப்பாற்கடலில் சயன கோலத்திலும் அருள்பாலித்தார்,
இது கிராமப்புறத்தில் அமைந்துள்ள கோயில் என்பதால், கொரோனா தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்த குறைவான பக்தர்கள் மட்டும் ஒருசமயத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும் ஆகும்.
இது பிரம்மாவினால் பூஜிக்கப்பட்ட, மார்கண்டேயருக்கு காட்சியளித்த தலமும் ஆகும், குழந்தைபேறு இல்லாத தம்பதியர்கள் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து பாயசம் நிவதனம் செய்தால் குழந்தைபேறு கிட்டும் என்பதும் ஐதீகம் மேலும் மாதம் தோறும் வளர்பிறை அஷ்டமி திதியில் தாயார் சன்னதியில் ஸ்ரீசுத்த ஹோமம் நடைபெறுவது வழக்கம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது அதில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் விசேஷமானது, இன்று புரட்டாசி 4வது சனிக்கிழமை என்பதால், மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் தொடர்ந்து விசேஷ பூஜைகளும் நடைபெற்றது
இது கிராமப்புறத்தில் உள்ள கோயில் என்பதால், கொரோனா தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்த குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் ஒருசமயத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏனைய திவ்ய தேச திருத்தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காத நிலையில், இங்கு மட்டும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிப்பது, பக்தர்களிடையே சற்று ஆறுதலையும், மனநிறைவையும் தந்துள்ளது