ஆவடி, அக். 2 –
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 33 இவர் தனது நண்பருடைய யமஹா வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வாகனம் காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியுற்று, அது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்தும், தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப் புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் இன்று அயப்பாக்கம் தண்ணீர் தொட்டி அருகில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
கடந்த செப் 18 ஆம் தேதி அயப்பாக்கம் ஐயப்பன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கரத்தை திருடிய நபர் இச்சோதனையில் பிடிப்பட்டுள்ளார். அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த தில் அவர் பெயர் மணிகண்டன் என்றும் வயது 20 திருவேற்காடு பகுதியில் வசித்து வருபவர் என தெரிய வந்ததையடுத்து அவரிடமிருந்து திருடிய இரு சக்கர வானத்தை பறிமுதல் செய்து அவரை அம்பத்தூர் குற்றவியல் நீதி மன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.