கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி தற்காலிகத் தேர்தலுக்கு 24 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்தியலிங்கம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக மீது சாட்டினார்.
மருதநல்லூர், அக். 01.21 –
மருதநல்லூரில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர் வைத்திலிங்கம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாராமனை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்பு பேசிய வைத்தியலிங்கம், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. அந்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றவில்லை என்றும், கடந்த கழக ஆட்சியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது என்றும், திமுக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தைக் கூட முறையாக, முழுமையாக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவில்லை என குற்றம் சாட்டினார். எடப்பாடியார் ஆட்சியில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக அரசு அதை பற்றி கவலைப்படாமல் மெத்தனமாக உள்ளது என்றும் அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் க .அறிவழகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.ராமநாதன், மேற்கு ஒன்றிய ,NRVS செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.