திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் வந்தவாசி நகராட்சி பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி கடந்த 20ந் தேதி முதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வந்தவாசி கோட்டை மூலைப் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை வந்தவாசி உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். மேலும் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், சாலை ஆய்வாளர் துலுக்கானம் ஆகியோர் மேற்பார்வையில் கால்வாய் அடைப்புகளை நீக்கி தூர்வாரி சீரமைத்தனர். இதே போல் வட்டாட்சியர் அலுவலகம் சாலை அச்சரபாக்கம் சாலையிலும் தூர்வாரும் பணி நடைபெற்றது.