திருவண்ணாமலை, செப்.9-

திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் விருது வழங்கி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி சீ.கிருபானந்தம் தலைமை ஆசிரியர் கீழ்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, அ.முருகையன் பட்டதாரி ஆசிரியர் வேட்டவலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, டி.விஜயலட்சுமி பட்டதாரி ஆசிரியர் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இரா.தமிழ்கனி பட்டதாரி ஆசிரியர் குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி, கி.முருகன் பட்டதாரி ஆசிரியர் மல்லவாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ம.ரகு பட்டதாரி ஆசிரியர் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜேம்ஸ் எட்வர்ட் தாஸ் தலைமை ஆசிரியர் மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜெ.பரந்தாமன் தலைமை ஆசிரியர் கூட்டத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, து.மோகன்ராஜ் தலைமை ஆசிரியர் சு.வாளவெட்டி ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளி, கோ.சேட்டு தலைமை ஆசிரியர் காட்டுவாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இரா.அசோகன் தலைமை ஆசிரியர் ந.மோட்டூடுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மூ.கேசவன் தலைமை ஆசிரியர் கீழாத்துர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, க.கோவேந்தன் தமிழாசிரியர் செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக மாநில அளவில் விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. கடந்த 5 ந் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 5 ஆசிரியர்களுக்கு மட்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் மூலம் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்தது.

இந்த விழாவுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (கூடுதல் பொறுப்பு) கோ.கிருஷ்ணபிரியா அனைவரையும் வரவேற்றார்.

 விழாவுக்கு தலைமையேற்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான பதக்கம் நற்சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் வழங்கி கௌரவித்தார்.

அப்போது ஆட்சியர் பேசுகையில் ஆசிரியர்களின் பணி போற்றத்தக்கது. கற்பித்தல் பணி மட்டுமின்றி சமூகத்துடன் தொடர்புடைய தேர்தல் பணி, விழிப்புணர்வு பணி போன்றவற்றில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.

மாணவர்களின் எதிர்கால நலனுக்காக ஆர்வத்துடனும் விருப்பத்துடன் கற்ப்பித்தல் பணியில் ஈடுபட்டதன் மூலம் நல்லாசிரியர் விருது பெற்று 13 ஆசிரியர்களும் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வேதபிரகாஷ், நடராசன், கலைவாணி, விஜயகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள் அன்பழகன் தேவஆசிர்வாதம் பள்ளி துணை ஆய்வாளர்கள் குமார், பாபு, பூபதி, சைனிமேஸ், மற்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here