சென்னை மடிப்பாக்கத்தில் கஞ்சா, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, வீட்டில் அவருடைய அம்மாவுடன் இருக்கும் போது திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாறி வெட்டி படுகொலை செய்தனர்.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை, ஆக. 31 –
சென்னை மடிப்பாக்கம் சபாபதி நகர் 2வது தெருவில் ரவுடி ராமச்சந்திரன் வயது (29) அவருடைய தாயார் சுந்தரியுடன் இன்று வீட்டில் இருந்த போது திடீரென 10 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் புகுந்து ராமச்சந்திரனை சரமாறியாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
அப்பொழுது வீட்டிலிருந்து ராமச்சந்திரனின் தாயார் குறுக்கிட்டு தடுத்த போது அவரது தாய் சுந்தரியின் கையில் அரிவாள் வெட்டுபட்டுள்ளது.
தகவல் அறிந்து, மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவுடி ராமச்சந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம் பேட்டையில் உள்ள அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தாயரை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் ராமச்சந்திரன் தாயாரிடம் விசாரித்த போது ராமச்சந்திரன் மீது கஞ்சா, கொலை முயற்சி போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கஞ்சா விற்பனை வழக்கு சம்மந்தமாக பழவந்தாங்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்று வீடு திரும்பியுள்ளார் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் ரவுடி ராமச்சந்திரன் வீட்டின் உள்ளே நுழைந்த பின்னர் 10 பேர் கொண்ட கும்பலும் வீட்டினுள் நுழைந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரவுடியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பல் யார் என்பதை அவர்கள் வந்து சென்ற காட்சி அருகில் பாதுகாப்பிற்காக சாலை மற்றும் வீடுகளில் பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.