செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
செங்கல்பட்டு, ஆக. 17 –
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 59 வது பிறந்த தினம். அவரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மட்டுமல்லாது ஒடுக்கப் பட்ட மக்களின் தலைவர் திருமா என பறை சாட்டும் விதத்தில் ஒடுக்கப் பட்டோர் விளிநிலை மக்கள் என அனைவராலும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அதனைப் போன்றே செங்கல் பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி விசிக தொண்டர்கள் அவர்களது கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 59 பிறந்த நாளை கேக் வெட்டி, பட்டாசு சத்தம் விண்ணை முட்ட வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பட்டையைக் கிளப்பும் வகையில் வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் ஊராட்சியில் விசிக ஊராட்சி கழக செயலாளர் மு.குமார் தலைமையில் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் படூர் ஊராட்சி விசிக பொருளாளர் தாஸ், செயலாளர் சதீஷ், கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட தொழிலாளர் விடுதலை துணை அமைப்பாளர் டி.என்.சதா, இளைஞர் அணி துணை செயலாளர் ராசா, தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், 9வது வார்டு செயலாளர் மு.பிரபு, திமுக கிளை செயலாளர் சேகர், ரவி, மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபன் அன்சாரி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கபீர்கான், படூர் கிளை செயலாளர் அலிபாஸ் உள்ளிட்ட தோழமை கட்சியை சேர்ந்தவர்களும் பொது மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரும் இனிப்புகளை பகிர்ந்துக் கொண்டு தொல் திருமா புகழ் ஒங்குக என உரக்க குரலெழுப்பி தங்கள் வாழ்த்துக்களை முழங்கினர்.