சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் திருவண்ணாமலை மாவட்ட சார்பில், தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை, ஆக 7 –
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில்,
இன்று (07.08.2021) சமூக நலன் மற்றும் மகளிர் உறிமைத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் திருவண்ணாமலை மாவட்ட சார்பில், தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து சிறப்பு நடமாடும் விழிப்புணர்வு வாகனத்ததை மாவட்ட ஆட்சித் தலைவர்
பா. முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா. முத்துகுமரசாமி, மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பா.கந்தன், உதவி ஆட்சியர் (பயிற்சி) . கட்டா ரவி தேஜா, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மாவட்ட மற்றும் வட்டார திட்ட ஒருங்கிணைப் பாளர்கள், திட்ட உதவியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தாய்க்கும் – சேய்க்கும் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நலனில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
குழந்தையின் முதல் 1,000 நாட்கள், அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே, அந்தக் குழந்தையின் ஒட்டு மொத்த எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த 1,000 நாட்களில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தவறாது தாய்ப்பால் அளிக்க வேண்டும். 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்.
5-வது மாதம் முதல் தாய்ப்பாலுடன், துணை உணவும் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
கொரோனா 3ம் அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் குழைந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் அதிக அளவில் உள்ளதால் கொரோனா காலகட்டத்தில் தாய்ப் பாலின் மகிமையை உணர்ந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்ட வேண்டும்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார், மேலும் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு வரையப்பட்டிருந்த விழுப்புணர்வு வண்ண கோலங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தாய் பால் வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழி அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்த விழிப்புணர்வு வாகனம் திருவண்ணாமலை நகராட்சியில் வீதிகள், துரிஞ்சாபுரம், கலசபாக்கம், புதுப்பாளையம் மற்றும் செங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.