இரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து போலி பணி ஆணை ஆவணம், மற்றும் அடையாள அட்டைகளையும் வழங்கிய இருவரைக் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
திருவள்ளூர் ஆக 4 –
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பொம்மராஜி பேட்டை கிராமம் ஓடைத்தெருவில் வசிக்கும் தண்டபாணி என்பவரின் 29 வயதுக்கொண்ட மகன் சத்தியராஜ் என்பவர் தன்னிடமும் மற்றும் எனது நண்பர்களான கண்ணபிரான், முருகன், சீனிவாசன், பாலாஜி ஆகியோரிடம் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜெகஜீவன் ராம் தெருவில் வசிக்கும் புஷ்பராஜ் என்பவரின் மகன் அரவிந்த், மற்றும் ராகுல் ஆகிய இருவரும் எங்களிடம் இரயில்வேயில் உயர் அலுவலர்களைத் தெரியும் உங்களுக்கு வேலை வேண்டுமெனில் தலா ஆள் ஒன்றுக்கு ரூ.2,50,000 தரும்படிக் கேட்டார்.
நாங்களும் வேலையின் தேவைக்கருதி, அவரிடம் ரூ. 2,50,000 வீதம் மொத்தம் ரூ. 12,50,000 அளித்தோம் அதனைத் தொடர்ந்து தனக்கும் எனது நண்பர்களுக்கும் போலியான பணி நியமன ஆணைக்கான ஆவணத்தையும் ,அடையாள அட்டையையும் தயாரித்து எங்களிடம் உண்மையான ஆவணங்கள் என்று கூறி எங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். மேலும் இது போன்று 40 க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 1,93,000 வீதம் ரூ.2,00,00,000 க்கு மேல் மோசடி செய்துள்ளார். என்றும் அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை திரும்ப அவரிடம் இருந்து பெற்றுத் தரும்படி அவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட திருவள்ளூர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.அசோகன் தலைமையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லில்லி மற்றும் போலீஸ் குழு நேற்று ஆக 3 அன்று மேற்படி குற்றவாளிகளை கைது செய்து நீதித்துறை நடுவர் , குற்றவியல் நீதிமன்றம் எண் 1 திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைக்கப் பட்டனர்.