திருவண்ணாமலை, ஆக.2-
பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இறந்தால் காப்பீட்டுத்தாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும் பிரமரின் சுரக்ஷா ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால் விபத்து காப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கி சுய உதவிக்குழுக்களுக்கான சிறப்பு மைக்ரோ சாட் கிளையின் வாடிக்கையாளராக இருந்த சென்னம்மாள் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மகன் கார்த்திகிடம் காப்பிட்டு தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி இந்தியன் வங்கி திருவண்ணாமலை மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். துணை மண்டல மேலாளர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை பயனாளியிடம் வழங்கிய மண்டல மேலாளர் பொதுமக்கள் அனைவரும் இத்தகைய ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மணிராஜ் இந்தியன் வங்கி மைக்ரோசாட் கிளை மேலாளர் தனசேகர் மற்றும் மண்டல அலுவலக அதிகாரிகள் மகளிர் திட்ட அலுவலர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.