திருத்தணி; செப், 13-  திருத்தணி முருகன் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் சுமார் ஆறு மாதம் ஆன நிலையில் உள்ள  ஆண் குழந்தை ஒன்று அனாதையாக இருந்துள்ளது.  அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்த போது யாரும் அக் குழந்தையின் மீது உரிமை கோரி வராததால் இது குறித்து மனம் கிராம நிர்வாக அலுவலர் முகமது யாசர் அராபத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவ மனையில் முதலுதவி  சிகிச்சை அளித்து பின் அங்கிருந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைப் பதற்காக குழந்தை கொண்டு செல்லப் பட்டுள்ளது. என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இக் குழந்தையை கோவில் வளாகத்தில் விட்டு சென்றது யார் ? என்பது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 திருவள்ளூர் செய்தியாளர் நவீன்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here