ராமநாதபுரம், ஆக. 22-
ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (ராம்கோ) தலைவராக அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் பதவியேற்றார். அவருடன் துணைத் தலைவர் உள்ளிட்ட இயக்குனர் களும் பொறுப் பேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (ராம்கோ) தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்தது . கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தராஜன் தேர்தல் அலுவலராக பணியாற்றினார்.
இதில் அதிமுக., மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன் , ராம்கோ தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார். 18 இயக்குநர்களும் தேர்வு செய்யப் பட்டனர். துணைத் தலைவராக பி.சுரேஷ்குமார் தேர்வு செய்யப் பட்டார். தலைவர் செ.முருகேசன், துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் கோவிந்தராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் அதிமுக., நிர்வாகிகள் பலர்
கலந்து கொண்டனர். ராம்கோ இயக்குநர்களாக சசிகுமார், ராமதாஸ், முகமது யூசுப், புவனேஸ்வரி, வாசுகி, தமிழரசி, பாகம் பிரியாள், தர்ம வள்ளி, சவுந்தரவள்ளி, முனியசாமி, காத்தமுத்து, பாலாமணி, ராமலட்சுமி, சுப்ரமணியன், சர்புதீன், சுரேஷ், சாகுல் ஹமீது ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.