தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் 2019 ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர்களின் பதவிகளுக்கான பொது எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25 இல் நடைப்பெற உள்ளதெனவும் அதில் 7145 விண்ணப்பதாரர்கள் பங்களிப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட தலைமை காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திருவள்ளூர்,ஆக,22-

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் மூலமாக 2019 ஆண்டிற்காக இரண்டாம் நிலைகாவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொது எழுத்து தேர்வு 25.08.2019 அன்று நடை பெறவுள்ளது. இத் தேர்வானது திருவள்ளூர் மாவட்டத்தில் 1. பிரதியுக்ஷா பொறியியல் கல்லூரி, அரண்வாயல் குப்பம் 2. ஸ்ரீராம் கல்லூரி, பெருமாள்பட்டு,  3.  C.C.C. இந்து மெட்ரிக் பள்ளி, காக்களூர் மற்றும் 4. SRI R.M. ஜெயின் வித்யாரம் மேல் நிலைப்பள்ளி, திருவள்ளூர் ஆகிய 4 தேர்வு மையங்களில் நடை பெறவுள்ளது அதில் மொத்தம் 7145  விண்ணப்பதாரர்கள் (ஆண்கள்; – 6283 பெண்கள் – 862) தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்திற்கு வருகையின் போது கீழ் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1.தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு 25.08.2019 அன்று காலை 09.00 மணிக்கு அறிக்கை செய்து கொள்ள வேண்டும்.

2.விண்ணப்பதாரர் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார். தேர்வு மையத்தினை மாற்றம் செய்ய இயலாது.

3.தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டுவராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் படமாட்டார்.

4.விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டை ஏதும் இருப்பின் அவற்றின் நகலை கொண்டு வருவது உகந்தது. (உதாரணம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ETC.,.)

5.தேர்வு தொடங்கிய பின் விண்ணப்பதாரர் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்.

  1. செல்போன் மற்றும் கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் தேர்வு மையம் மற்றும் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப் படமாட்டாது.
  2. விண்ணப்பதாரர் விடைத்தாளில் பட்டை தீட்ட நீலம் அல்லதுகருப்பு நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வரவேண்டும்.
  3. விண்ணப்பதாரர் தேர்வு நேரத்தில் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப் படமாட்டார். மேலும் தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ கூடாது.
  4. இத்தேர்வுக் கூட நுழைவுச் சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இல்லா மலிருந்தாலோ அல்லது தெளிவாக இல்லா மலிருந்தாலோ விண்ணப்பதாரர் தனது புகைப்படத்தினை ஒட்டி அதில் A அல்லது B பிரிவு (GAZETTED OFFICER) அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வரவேண்டுமென, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here