ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அலு வலகத்தில் நடைப் பெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஐ பி பி செயலாளர் பைசல் கிராஅத் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.
பொறுப்பு குழுத் தலைவர் ஆனந்தூர் பட்டாணி மீரான் தலைமை ஏற்க தேர்தல் அதிகாரியாக சிறப்பு அழைப்பாளராக மாநில தமுமுக செயலாளர் சாதிக் தேர்தலை நடத்தினார்.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்களாக பனைக்குளம் பரக்கத் துல்லாஹ்,
திருப்புல்லாணி ரைஸ் இப்ராஹிம், முகவை அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் நகர் தலைவராக அப்துல் ரஹீம்,
ராமநாதபுரம் நகர த.மு.மு.க செயலாளராக சுலைமான், ராமநாதபுரம் நகர் மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளராக ஜாகீர் (பாபு),
ராமநாதபுரம் நகர் தமுமுக-மமக பொருளாளராக முகம்மது தமீம்,
ராமநாதபுரம் நகர் 15வது வார்டு தமுமுக-மமக தலைவராக அப்துல் லத்தீப், 15-வார்டு தமுமுக செயலாளராக திவான் முஹம்மது,
15-வார்டு மமக செயலாளராக முஹம்மது ஆரீப்,
15-வது வார்டு தமுமுக மமக பொருளாளராக புர்கான்அலி
7வது வார்டு தமுமுக மமக தலைவராக முகமது அன்சாரி,
7வது வார்டு தமுமுக செயலாளராக முகைதீன் அப்துல் காதர்,
7வது வார்டு மமக செயலாள ராக அப்துல் ரகுமான்
தமுமுக பொருளாள ராக பைசல்
20வது வார்டு தலைவ ராக மைதீன் கனி,
பொருளாள ராக அபுசாலி,
தமுமுக செயலாள ராக சைபுல்லா கான்,
மமக செயலாள ராக தஸ்த கீர்,
19வது வார்டு தலைவ ராக அரசியல் தமுமுக செயலாள ராக காதர்,
மமக செயலாள ராக முஹம்மது ரீஹான்,
பொருளாள ராக சாதிக் ஆகியோர் ஏகமனதாக தேர்ந் தெடுக்கப் பட்டார்கள்.
கூட்டத்தில்,
மத்திய பி.ஜே.பி அரசு இந்திய சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வியல் அச் சுறுத்தலுக்கு பொறுப் பேற்று மத துவேஷங்களை ஏற்படுத்தும் இந்துத்துவ இன வெறியர்களை கைது செய்து இந்திய இறை யாண்மையை காக்கவும், இராமநாதபுர மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையை சீரமைக்க வேண்டும். இராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின் சாதனங்கள்,மேஜை-நாற்காலிகளை நகராட்சி நிர்வாகம் பழுது பார்க்கவும், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பழுது நீக்கி பயண் பாட்டுக்கு கொண்டு வரவும், இராமநாதபுரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டை துாய்மையாக வைத்து கொள்ள நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப் பட்டன.
முன்னதாக ஊடக பிரிவு செயலாளர் யாஸர் அரபாத் வரவேற்றார்.
மருத்துவ சேவை அணி செயலாளர் யாஸர் நன்றி கூறினார்.
செய்திகள் தமிழ்நாடு தென்மண்டல தலைமைச் செய்தியாளர் இ.சிவசங்கரன்