ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் மத்திய மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் *எஸ்.டி.பி.ஐ., மேற்குமாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்* தலைமைதாங்கினார். *கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் SDTU,WIM மாவட்ட நிர்வாகிகள்* முன்னிலை வகித்தனர்.
கிழக்குமாவட்டப் பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம் கண்டன உரையாற்றினார். அவர்கூறுகையில், ஜார்க்கண்ட்டில் பாஸிச வெறியர்களால் அடித்துப் படுகொலை செய்யப் பட்ட *தப்ரேஸ் அன்சாரி* க்கு நீதி வேண்டும். மத்திய அரசும் மாநில அரசும் இச்செயலை கண்டும் காணாமல் இருப்பது குற்றவாளிகளை ஊக்குவிக்கும் செயலாகும், என்றார்.
வட இந்தியாவில் பசுவின் பெயரால், பாரத்மாதா, ஜெய்ஸ்ரீராம் போன்ற வாசகங்களை சொல்லச்சொல்லி ஒவ்வொரு நாளும் கும்பல்களால் தனிபர்களை அடித்துக் கொள்ளப் படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிக மாகிறது. இதை அரசாங்கம் மற்றும் காவல்துறை உடனடியாக தடுத்திட வேண்டும். சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்தி தண்டிக்கவேண்டும் என்றார்.
தமிழ்மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது பேசுகையில்,
அரசு செய்யும் அநியாயத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடும் மக்களை கடுமையான சட்டங்களைக் கொண்டும், NIA போன்ற புலனாய்வு முகமையை ஏவியும் ஒடுக்கு கின்றார்கள் யாரும் போராடக்கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் அதிகம் பாதிப்படைவது சிறுபான்மை மக்கள் தான். சிறுபான்மை மக்களுக்காக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்கச் சென்றவர்களே இச் செயலை கண்டித்து குரல் கொடுக்க தயங்குகின்றார்கள். தற்போது நாகை, கோவை, இராமநாதபுரம் மாவட்டங்களில் நடைபெரும் NIA சோதனையால் அப்பாவி மக்களும் சிறுபான்மை மக்களும் மிகவும் பாதிப் படைந்துள்ளனர். தனி மனிதன் ஒவ்வொரு வரும் தன் உயிரை பாதுகாக்க எதிர்த்துப் போராட வேண்டும். அப்போது தான் விடியல் பிறக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் நூற்றக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட செயலாளர் வண்ணை அஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இராமநாதபுரம் நகர செயலாளர் ஜகுபர் சாதிக் நன்றி கூறினார்