இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மின் அழுத்தப் பாதையில் உள்ள மின்கருவிகளின் பாதிப்பால் ஏற்பட்ட மின் வினியோகத் தடை சீர் செய்யப் பட்டது என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்: ஜூலை,5-
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம், ஆர்.காவனூர், ரெகுநாதபுரம் துணை மின் நிலையம் வழியாக ஆர்எஸ் மடை, வழுதூர் துணை மின் நிலையங்கள் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 3 ம் தேதி இரவு, உயர் மின் அழுத்த பாதையில் உள்ள இன்சுலேட்டரில் (Insulator) உண்டான பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மின்தடையை தொடர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழக அலுவலர்கள் மூலம் முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மின்தடை சீர் செய்யப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. என அச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.