இராமநாதபுரம், ஆக. 15 –

75வது சுதந்திர தின வைர விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் கூடுதல் ஆட்சித் தலைவர் பிரவீண் குமார் ஆகியோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 17 பொது பயனாளிகளுக்கு 9 லட்சத்து 10 ஆயிரத்து 16 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

விழாவில் காவல்துறை துணைத் தலைவர் மயில்வாகனன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மாவட்ட அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

இராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்திய திரு நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here