சென்னை, ஜூன். 02 –

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளியிலிருந்து சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பிரித்து எடுக்கப்பட்டு பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சி மற்றும் சிமிண்ட் ஆலைகளுக்கு அனுப்ப படுவதாக முதன்மைச் செயலாளரும் ஆணையாளருமான ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

பேலிங் மெசின் பயன்படுத்தி பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்க்கு வழங்கப்பட்டு வருகிறது

மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் ஆர்.ஆர்.சி பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க்கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும், நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழால் பாதிப்பினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வார்டிலும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே 14 முதல் 27 – 2022 வரை 15 நாட்களில்  மாநகராட்சி சார்பில் 3020 கி.கி.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12,44,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகின்ற போதிலும், நாள்தோறும் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வருகின்றன. அவ்வாறு சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்தெடுக்கப் பட்டு பண்டல்களாக மாற்றும் இயந்திரங்களை பேலிங் மெசின் பயன்படுத்தி பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்க்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவும் அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும், குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது என முதன்மை செயலாளரும் ஆணையாளருமான க கன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here