திருவள்ளூர், மே. 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் தொடங்கியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில்  நீட் தேர்வு  நடைபெறுகிறது. திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 447 மாணவிகள் 153 மாணவர்கள் என 600 பேர் தேர்வு எழுதினார்கள்.

அதைப் போல் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ ஆர். எம். ஜெயின் வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளியில் 359 மாணவிகளும் 169 மாணவர்களும் என 528 பேர் தேர்வு எழுதினார்கள்..

கொரட்டூரில் உள்ள டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியில் 353 மாணவிகளும் 151 மாணவர்களும் என 504 பேர் தேர்வு எழுதினார்கள்..

 

மேலும் செங்குன்றத்தில் உள்ள குட் வேர்ட் பப்ளிக் பள்ளியில் 319 மாணவிகளும் 185 மாணவர்களும் என மொத்தம் 504 பேர் தேர்வு எழுதினார்கள். அம்பத்தூரில் உள்ள ஜி.கே. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 366 மாணவிகளும் 138 மாணவர்களும் என 504 பேர் தேர்வு எழுதினார்கள்.

பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பத்தில் உள்ள த பியூப்பிள் சவீதா எகோ பள்ளியில் 357 மாணவிகளும் 147 மாணவர்களும் என 504  பேர் தேர்வு எழுதினார்கள். அதே போல் திருத்தணியில் உள்ள சக்தி பப்ளிக் பள்ளியில் 86 மாணவிகளும் 37 மாணவிகளும் என 123 பேர் இந்த நீட் தேர்வு எழுதினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதில் இருந்து நேற்று 2287 மாணவிகளும் 980 மாணவர்களும் என மொத்தம் 3267 மாணவ மாணவிகள் அத்தேர்வினை எழுதுவுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு மருத்துவ படிப்பிற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வினை எழுதியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here