ஊத்துக்கோட்டை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …
ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அச் சிறப்பு மிகு கிரிக்கெட் போட்டியில் ஊத்துக்கோட்டை செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் ஆலந்தூர் திருவள்ளூர் திருவொற்றியூர் திருத்தணி பொன்னேரி பூந்தமல்லி என 32 வழக்கறிஞர்கள் அணிகள் பங்கேற்றது.
திருவள்ளூர் வழக்கறிஞர்கள் அணி முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை வழங்கும் விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலாளர் கவி பாரதி, பொருளாளர் நரசிம்மன், மூத்த வழக்கறிஞர்கள் வெற்றி தமிழன், சீனிவாசன், பாலசுப்பிரமணிய குமார், முனுசாமி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் மூத்த வக்கீல்கள் பார்த்திபன், குணசேகரன், பி.எம்.சாமி, வெஸ்லி, ராஜசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
மேலும் அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி, தொழிலதிபர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் 4 இடங்களை பிடித்த திருவள்ளூர் ஊத்துக்கோட்டை பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை ஏ வழக்கறிஞர்கள் அணி வெற்றி கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் சி.எச்.சேகர், சிறுனியம் பலராமன், பூண்டி ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் மற்றும் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கிற பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ரவிக்குமார், ஊத்துக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் குமரவேல், லயன் திலீப் குமார், கலந்து கொண்டனர்
முன்னதாக மறைந்த வக்கீல்கள் சத்யா குமார் ரூபன் பிரபாகர் ஆகியோரது குடும்பத்துக்கு தலா 25 ஆயிரம் நிதிவுதவியை உயர் நீதிமன்ற வக்கீல் இளங்கோவன் வழங்கினார்.