கும்பகோணம், மே. 09 –

கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாகரசம்பேட்டையில் அமைந்துள்ளது புகழ்மிக்க அழகு நாச்சியம்மன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் தூக்குதேர் பெரும் விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்றே அப்பெருவிழா இந்தாண்டு கடந்த 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, நாள்தோறும் ஸ்ரீகாயத்திரி அம்மன் அலங்காரம், வைஷ்ணவ அலங்காரம், பார்வதி அலுங்காரம் மகஷ்ன அலங்காரம் என நாள்தோறும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மேலும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கு தேர் பெரு விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை சக்கரம் இல்லாத அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரில் அழகு நாச்சியம்மன் எழுந்தருளினார். 4டன் எடையுள்ள இத்தூக்கு தேரினை 15 நாட்கள் விரதமிருந்து வந்த 300 பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தப் படி, கீழகாட்டு இருப்பு, கீழவிசலூர், நாகரசம்பேட்டை ஆகிய 6 கிலோ மீட்டர் தூர வீதிகளிலும், மேலும் விளை நிலங்களையும் கடந்து சென்ற தூக்குத்தேர் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here