சென்னை, செப். 29 –

தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த செப் 13-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன் படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2547 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டன. மேலும் 716 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். 365 இடங்களுக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 4 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்பு மனுக்கள் செய்யப் படவில்லை என்றும் இறுதியாக 418 பதவியிடங்களுக்கு 1386 வேடபாளர்கள் தேர்தல்களத்தில் உள்ளனர் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here