திருவாரூர்,மே. 09 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …

திருவாரூர் மாவட்டம், தமிழ் மொழியிலும் சங்கீத கீர்த்தனைகளை பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமா சாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி: அவர் பிறந்த திருவாரூரில் உள்ள அவதார இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை வழிபாடு நடைப்பெற்றது.

தமிழ்மொழியிலும் சங்கீத கீர்த்தனைகளை பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமாசாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி விழா அவர் பிறந்த திருவாரூர் மேட்டூத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை வழிபாடு நடைபெற்றது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஆகிய மூவரும் திருவாரூரில் கிபி.17ம் நூற்றாண்டில் ஒரே கால கட்டத்தில் பிறந்தவர்கள்.

இதில் முதலாவதாக அவதரித்த ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் திருவாரூர் மேட்டூத்தெருவில் உள்ள இல்லத்தில் 1762ம் ஆண்டு சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

இவர் சிறு வயது முதலே கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம்கொண்டு எண்ணற்ற கீர்த்தனைகளை இயற்றி பாடுயுள்ளார்.  கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப பாடத்திற்கான கீதம், ஸ்வரஜதி, வர்ணம், கிருத்திகம்,  ராகம் ஆகியவற்றை எளிய நடையில் இயற்றி குழந்தைகள் கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அடித்தளம் அமைத்து கொடுத்தவர் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் இந்த மூவரில் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் மட்டும் தமிழ்மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் 8 கீர்த்தனைகளை பாடியுள்ளார்.  இவரது கீர்த்தனைகளில் நவரத்தினமாளிகா, ஸ்வரஜதி  முதலான எண்ணற்ற சங்கீத கீர்த்தனைகள் மிகவும் பிரசித்திபெற்றது.

ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் பிறந்த சித்திரை மாதம் கிருத்திகை நட்சத்திர ஜெயந்திநாளான இன்று திருவாரூரில் உள்ள அவர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்க சிறப்பு அபிஷேக ஆராதனை, விஷேச பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.  இதனை தொடர்ந்து திருச்சி பகுதியை சேர்ந்த  கர்நாடக சங்கீத இசை குழுவினர்கள் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள் இயற்றிய கீர்த்தனை அவரது இல்லத்தில் அமர்ந்து பாடி இசை ஆராதனை செய்து வருகின்றனர்.

ஸ்ரீசியாமாசாஸ்திரிகளின் ஜெயந்திநாளில் சாஸ்திர சம்பிரதாயப்படி குழந்தைகள் பிறந்தால் வழங்கப்படும் நெல்விதை தானம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here