திருவாரூர், மார்ச். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித் தேர் திருவிழா எதிர் வரும் மார்ச் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது

திருவாரூர் மாவட்டம், உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழி தேர் திருவிழாவை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எனவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செலுத்தவும்  டிஎஸ்பி தலைமையில் நான்கு போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்ட 150 போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருவாரூரில் ஆழித்தேர் திருவிழா நடைபெறும் 21 ஆம் தேதி அன்று  பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல எந்தவித தடையும் இல்லை. எனவும், மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரிப்பன் வழங்கும் திட்டம் காவல் துறை சார்பில் செயல்படுத்தப்படும். என்றார்.

மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மற்றும் சி சி டிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட உள்ளது. நகர் பகுதிக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லையெனவும், திருவிழாவின் போது அதிக சத்தம் எழுப்பும் ஊது குழலுக்கு தடை. விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படும். எனவும் அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் ஆழித்தேரோடும் நான்கு வீதிகளிலும் பொதுமக்களின் உதவிக்காக நான்கு காவல் உதவி மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்அப்போது அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here