கும்பகோணம், ஜூலை. 16 –

கும்பகோணம் மாநகரத்திலுள்ள காசிராமன் தெருவில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன.

இந்நிலையில் கடந்த .2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளன்று அப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில்  94 பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

அதன் 19 ஆம் ஆண்டான இன்று அத்துக்க நாளினை அனுசரிக்கும் விதமாக, அப்பள்ளியின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் அக்கோர விபத்தில்  உயிரிழந்த 94 குழந்தைகளின் புகைப்படங்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி, தங்கள் கண்ணீரஞ்சலியினை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, பாலக்கரையில் இருந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், ஊர்வலமாக வந்து பள்ளி முன்பு வைக்கப்பட்டிருக்கும் அக்குழந்தைகளில் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து அக்கோர விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு தலைமை கொறடா கோவி செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம், இத்தினத்தினை வரும் ஆண்டில் தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும், மேலும் இந்நாளன்று (ஜூலை 16) உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டி அவர்கள் இருவரிடமும் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.

அதன் பின்பு அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம ராமநாதன் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சின்னையன் பொதுக்குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீதர் மாணவர் அணி மாவட்ட செயலாளர் சரவணன் முன்னாள் மாநகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதிக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் என தொடர்ந்து வருகை தந்து மலர் தூவியும் தீபம் ஏற்றியும் தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here