ராமநாதபுரம், ஆக. 10-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம்  ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காவலர்களில்  164 காவலர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை செய்தனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா வரேவற்றார்.
தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பாக 2018-19ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் 7 மாதங்கள் காவலர் பயிற்சி மையங்களில் உடற்பயிற்சி மற்றும் ஒரு மாதம் காவல் நிலையங்களில் நடைமுறை பயிற்சி நிறைவு செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இதில் 164 காவலர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியமர்த்தப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிக்கை செய்தனர். அவர்களை காவல்துறை காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா வரேவற்றார். பின் மாவட்டத்தில் பணிபுரிவதற்கான அறிவுரைகளை வழங்கினார்.  மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிதாக ஒ வஜ்ரா (கலவர தடுப்பு) வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவானத்தையும் காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here