திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான ரசாயன உரங்கள் 16ஆயிரத்து 461 மெட்ரிக் டன் அளவு இருப்பில் உள்ளது. இதில் தனியார் நிறுவனங்களுடன் யூரியா 6ஆயிரத்து 972 மெட்ரிக் டன், டிஏபி 882 மெட்ரிக் டன், பொட்டாஷ் 562 மெட்ரிக் டன், காம்ளக்ஸ் 3ஆயிரத்து 295 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. இதுதவிர தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் யூரியா ஆயிரத்து 459 மெட்ரிக் டன், டிஏபி 636 மெட்ரிக் டன், பொட்டாஷ் 376 மெட்ரிக் டன், காம்ளக்ஸ் ஆயிரத்து 273 மெட்ரிக் டன் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை வாங்கி பிஒஎஸ் இயந்திரம் மூலம் ரசீது பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here