ஆவடி, நவ. 17 –

சென்னை புறநகர் பகுதி ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா இரு தினங்களாக பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் திருமதி சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் காணொளி காட்சியில் தலைமை தாங்கினார்.

பல்கலைக்கழக தாளாளர் திருமதி ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் குமார் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் திரு சாலிவாகனன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் டாக்டர் பி வெங்கட்ராமன் ஆவடி தீன் ஊர்தி தொழிற்சாலையில் முன்னணி விஞ்ஞானி இயக்குனர் டாக்டர் வி பாலமுருகன் இவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்கலைக்கழக அளவில் துறை ரீதியாக முதலிடம் பிடித்த 14 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் 39 ஆராய்ச்சி மாணவர்களுக்கு முனைவர் பட்டமும் 225 முதுகலை மாணவர்கள் மற்றும் இளங்கலை மாணவர்களுக்கு 2223 பட்டங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார் முன்னதாக வேல்டெக் பல்கலைக் கழகத்தின் சார்பில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் டாக்டர் பி வெங்கட்ராமன் அவர்கள் அறிவியல் துறையில் ஆற்றி வரும் சேவைகளுக்கான முனைவர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தர் சார்பில் தாளாளர் திருமதி ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் குமார் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் சாலிவாகனன் இணைந்து வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் எஸ் பி தியாகராஜன் பதிவாளர் டாக்டர் கண்ணன் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here