திருவண்ணாமலை, ஜன. 24 –

துணை வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு திருவண்ணாமலை மாவட்டஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது.  அதன்படி, வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.  பின்னர்  அவருடைய விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள், கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்களை  தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.
    நடப்பு ஆண்டில் முதல் தவணையாக ரூ.60 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 69 இயந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வரும் வார இறுதியில் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.  விவசாயிகள் இயந்திர கருவியை தேர்வு செய்தால் அவர்கள் 1,2,3 என எண் இடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.  ஏற்கனவே கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படாது.  எனவே, இந்த 2021-2022 ஆண்டுக்கு புதியதாக பதிவு செய்ய வேண்டும்.

    ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க முடியும்.  அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும்
இந்த திட்டத்தில் பயன் பெற திருவண்ணாமலை, கீழ்பென்னத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளுர் தாலுக்கா விவசாயிகள் எண்.03  எண் 813-பி,வானவில் நகர், வேங்கிக்கால், திருவண்ணாமலையில்  உள்ள உதவி செயற்பொறியாளர்(வேபொ) அலுவலகத்தினையும், இது போல் ஆரணி, செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட் தாலுக்கா விவசாயிகள் எண்.03 மில்லர்ஸ் சாலை,வேளாண் வணிக விற்பனை மைய வளாகம், ஆரணி என்கின்ற முகவரியில் உள்ள உதவிசெயற்பொறியாளர் (வேபொ) அலுவலகத்தினையும், தொடர்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here