திருமண்டங்குடி, டிச. 20 –

கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அப்போராட்டத்தின் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகள் கையில் கரும்பு மற்றும் சட்டியை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.

மேலும் அவ்வாலை கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும்,  பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் அதனை விவசாயிகளுக்கு திரும்ப தராமல் ஆலையை நட்டக்கணக்கு காட்டி கடந்த 2017ஆம் ஆண்டு திருஆரூரான் சர்க்கரை ஆலை மூடிவிட்டனர்.

இதனால் பாதிப்புக்கு உள்ளான கரும்பு விவசாயிகள் அவ்வாலை மூடப்பட்ட முதல் சுமார் ஐந்தாண்டுக் காலமாக பல்வேறு போர்டங்கை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த இருபது நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர.,

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் நாக முருகேசன் மன்னார்குடி அனைத்து விவசாயிகள் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு முக்கிய நிர்வாகிகள் சரபோஜி செந்தில் நல்லதம்பி ராஜேந்திரன் மோகன் தாஸ் அமிர்தலிங்கம் குணசேகரன் திருநாவுக்கரசு  கலையரசன் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here