தஞ்சாவூர், மார்ச். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள  குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற  நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டு வருவதாக அக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் செய்தியாளர் ஞந்திப்பில் அவர் தெரிவிக்கும் போது, காது மூக்கு, தொண்டை நிபுணர்களை முறையான படி அணுகும் போது   பிறவியிலேயே காது கேட்காத தன்மையை பரிசோதனை செய்து ஆரம்ப இடையீட்டு மையத்தின் மூலமாக குழந்தைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் காது வால் நரம்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை  ரூ.10 லட்சம்  செலவில் செய்யப்படுகிறது. ஆனால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்படுவதாக அப்போது கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

மேலும் இந்த தலைமுறையின் அத்தியாவசிய பொருளான செல்போன் ப்ளூடூத், இயர் பட்ஸ்  போன்ற பொருள்களினால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் காது கேளாமை ஏற்படும் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுரைகள் தக்க தருணத்தில் பொதுமக்களுக்கு முறையாக அளிக்கபட்டு வருகிறது.

இக்கால இளைஞர்கள் வெகு நேரம் காதுகளில் இயர்பட்ஸ்உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என அப்போது கல்லூரி முதல்வர் அறிவுறுத்தினார். அறுவை சிகிச்சைகள் மூலம் சரிசெய்யபட முடியாத காது கேளாமை நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக காது கேட்கும் கருவி  வழங்கப்படுகிறது.

அவை அனைத்திற்கும் மேலாக நாளைய உலகத்தின் எதிர்பார்ப்புகளான சிறுவயது குழந்தைகளில் பிறப்பில் இருந்து காது கேளாமை குறைபாடு உள்ள  குழந்தைகளுக்கு காது வால் நரம்பு அறுவை சிகிச்சை என்ற நவீன மிக உயரிய அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here