ராமநாதபுரம், மார்ச்
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 10வது பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி செயலர் என்.எஸ்.ஜேசுதாஸ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.கல்லுாரி முதல்வர் கே.ஹேமலதா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.
திரு இருதய சபையின் பொது ஆலோசகர் மரியசூசை அடைக்கலம், சபை பொதுச் செயலாளர்டி.கஸ்பார், முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானப்பிரகாசம், சபை பொது ஆலோசகர் லெவில், கிரிஸ் தாமஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக திரு இருதய சபையின் தலைவர் எம்.வேளாங்கண்ணி பங்கேற்று பேசுகையில்

அறிவில் நெல்சன் மண்டேலா போலவும், கருணையில் கரும வீரர் காமராஜர் போலவும் பட்டதாரிகள் செயல்படவேண்டும் என்றார். இளங் கலையில் 313 மாணவ, மாணவியரும், முதுகலையில் 52 பேரும் மொத்தம் 365 மாணவர்கள் பட்டம் பெற்றுக் கொண்டனர். பல்கலைக் கழக அளவில்15 பேர் பல்கலை தரம் பெற்றுள்ளனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here