சென்னை, மே. 13 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.35 கோடியே 79 இலட்சம் செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள், மேலும் ஒரு பூங்கா மறுசீரமைக்கும் பணி, 5 புதிய விளையாட்டுத் திடல்கள் அமைக்கும் பணிகள் 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்ட டங்கள் கட்டும் பணிகள் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

 புதுப்பிக்கப்பட்டுள்ள பள்ளிகள் – திட்ட மதிப்பு ரூ.12.99 கோடி  

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை சர்மா நகரில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் சென்னை தொடக்கப்பள்ளி ஆகியவற்றை ரூ.2 கோடியே 40 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதுப்போன்று இராயபுரம் கல்லறை சாலை, மணிகண்டன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் சென்னை தொடக்கப்பள்ளி ஆகியப் பள்ளிகள் ரூ.4 கோடியே 53 இலட்சம் செலவிலும், மேலும் அண்ணாநகர் செனாய்நகர், சுப்ராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளை ரூ. 4 கோடி செலவிலும், அடையாறு காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியை ரூ.2 கோடியே 6 இலட்சம் செலவிலும் மொத்தம் ரூ. 12.99 கோடி செலவில் இப்பள்ளி பணிகள் புதுப்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

பணிகள் நிறைவடைந்த புதிய பூங்காக்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட பூங்கா … திட்ட மதிப்பு ரு. 9.93 கோடி

அம்பத்தூர் வானகரம் சாலை, அத்திப்பட்டு திறந்தவெளி நிலம், டி.ஐ சைக்கிள் சாலை இரயில் விஹார் குடியிருப்பில் திறந்த வெளி நிலம், தாமிரபரணி தெருவில் உள்ள புது செஞ்சுரி மருத்துவமனை திறந்தவெளி நிலம், எம்ரால்டு பிளாட்ஸ் மின்வாரிய அலுவலகம் அருகிலுள்ள திறந்த வெளி நிலம், நாரயணா நகர் திறந்தவெளி நிலம், டி.வி.எஸ் அவென்யு 34 வது தெருவிலுள்ள திறந்தவெளி நிலம், திருமங்கலம் சாலை எச்.ஐ.ஜி. பிளாட்ஸ் திறந்தவெளி நிலம் ஆகியவைகளும்,

மேலும் சொழிங்கநல்லூர் நூக்கம்பாளையம் மைக்ரோ சிப் ஐ.டி நிறுவனம் அருகில் உள்ள இணைப்பு சாலை, விநாயகர் நகர் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் பவுண்டரி தெரு, வளசரவாக்கம் நொளம்பூர் எஸ் & பி கார்டன் 8 வது தெரு மற்றும் ராமாபுரத்தில் திருவள்ளூர் சாலை, மாதவரம் தாங்கல் கரை சாலை, மாதவரம் மீனாம்பாள் அவென்யு ( சாஸ்திரி நகர் ), ஜெய் மாருதி நகர் ( மேற்கு ), மேட்டூர் இணைப்புச்சாலை ( எஸ்.ஐ.எஸ். ) கேப் டவுன், அடையாறு லீலா பேலஸ், சோமர் செட், ஜெயின் சாகரீகா, ஆகிய இடங்களில் ரூ. 9 கோடியே 12 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 19 புதிய பூங்காக்களும், மேலும் சோழிங்கநல்லூர் சகதி நகரில் ரூ.81 இலட்சம் செலவில் மறு சீரமைப்பட்டுள்ள ஒரு பூங்காவிலும் மொத்தம் ரூ. 9.93 கோடி செலவில் பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது.

பணி நிறைப்பெற்ற விளையாட்டுத் திடல்கள் – மதிப்பீட்டுத் தொகை ரூ. 2.15 கோடி …

இராயபுரம் காத்படா பிரதான சாலையில் உள்ள திறந்தவெளி நிலம், மாதவரம் மாதவரம் ரிங் சாலை மற்றும் எம்.ஜிழார் 2 வது தெரு, ஆலந்தூர் சேதுலட்சுமி அவென்யு, மதுரவாயல் கங்கா நகரில் உள்ள காந்தி தெரு ஆகிய ஐந்து இடங்களில் மொத்தம் ரூ.2 கோடியே 15 இலட்சம் செலவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.

பணி நிறைவு பெற்றுள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையக் கட்ட டங்கள் – திட்ட மதிப்பீடு ரூ.10.72 கோடி

கொடுங்கையூர் 35 வார்டு, இராயபுரத்தில் ராட்லர் தெரு (பெருமாள் பேட்டை)

மற்றும் கொண்டித்தோப்பு, புளியந்தோப்பு பகுதி திருவிக நகரில் உள்ள வ உ சி நகர் 1 வது தெரு, அம்பத்தூர் முகப்பேர் மேற்கு காளமேகம் சாலை உள்ளிட்ட இடங்களில் ஐந்து நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் மொத்தம் ரூ. 10 கோடியே 72 இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு பணி நிறைவுப் பெற்றுள்ளது. ஆக மொத்தம் ரூ. 35.79 கோடி மதிப்பீட்டிலான பெருநகர சென்னை மாநகராட்சின் சார்பில் முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வின் போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் – முதன்மைச்செயலாளர் ககன்தீப் சிங்பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்குமார், மதிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குராலா, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பா.பொன்னையா, ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்பகராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here