தஞ்சாவூர், மார்ச். 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், மாநகராடசி பகுதியில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை  மற்றும் தொடக்கப் பணிக்கான விழா நடைப்பெற்றது.

அதில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 37, 38, 39, 40 மற்றும்  41 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட  நேதாஜி ரோடு, பெத்த பெருமாள் காலணி, அண்ணா நகர், நர்மா தெரு, யமுனா தெரு உள்ளிட்ட பகுதிகளில தார்சாலை புணரமைப்பு பணிக்காக திட்டமதிப்பு ரூ. 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அப் பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் பணி துவக்க விழா நடைப்பெற்றது.

அதுபோல் ரூ.58 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆனந்தம் நகர், டாம் காலணி, ராவுத்தா பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், விஜயக்குமாரி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here