கும்பகோணம், பிப். 10 –

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில்  மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு 275 வேட்பாளர்கள் களத்தில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இன்னும் சில தினங்களே தேர்தலுக்கு எஞ்சியுள்ளதால் தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான நூதன பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 24 வது வார்டில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் ரூபின்ஷா அலெக்சாண்டர் கக்கன் காலனி பகுதியில் தென்னை மரம் சின்னத்திற்கு வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தில் மேலிட பொறுப்பாளர் விவேகனந்தன் தேர்தல் குழு உறுப்பினர்கள் முல்லை வளவன் உறவழகன் நீலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன் திமுக வார்டு செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here