திருவள்ளூர், பிப். 22 –
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் அம்மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 80 இருசக்கர வாகனங்கள் 4 மூன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள் 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 112 வாகனங்கள் எதிர் வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைப்பெறுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ் ஏலத்தில் பங்கேற்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமெனவும், மேலும் கொரோனா தடுப்பூசி இருக்க வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ் ஏலத்தில் ஏலம் கேட்பவர்கள் முன் வைப்புத் தொகையாக இரு சக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாயும், மூன்று சக்கர வானம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமும் செலுத்தி அதற்கான டோக்கன் அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப் படுவதால் அதனைப் பெற்று கொண்டு ஏலத்தில் பங்கேற்கும் படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏலத்தில் வாகனங்களை ஏலம் கேட்டவர்கள் கேட்டத் தொகையுடன் அரசு விற்பனை வரியாக இரு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீத வரியையும் உடனடியாக செலுத்திட வேண்டுமெ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகனத்தின் விபரம் மற்றும் அதற்கு நிரணயிக்கப்பட்டுள்ள குறைந்தப்பட்ச மதிப்பீட்டுத் தொகை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து தெரிந்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான வாகன பதிவுச்சான்று மற்றும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டுமெனவும் அதுப்போன்று பொது ஏலத்தில் கலந்துக் கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் கார்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வரவேண்டுமெனவும் மேலும் ஏலத்தில் கலந்துக்கொண்டு வாகனத்தை எடுத்தவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகையினை ஏலத்தின் முடிவில் திருப்பரப்படும் எனவும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துணைக்கண்காணிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.