செங்கல்பட்டு, ஜன. 3 –

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மலைமேல் உள்ள வீர ஆஞ்சநேயர்க்கு 29 ஆம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.

மார்கழி 18ம் தேதி ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்த தினமாக கொண்டு அந்நாளை பக்தர்கள் அனுமந்த ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் மலைமேல் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் 29ம் ஆண்டு அனுமந்த ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

காலையில் சிறப்பு விஷேச அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பஜனை மங்கள வாத்தியம் வானவேடிக்கை முழங்க, ஸ்ரீ வீர ஆஞசநேயர் திருக்கோயில் திருக்குளத்திலிருந்து பால்குடம் எடுத்து வந்து திருமலைமேல் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக காலை முதல் இடைவிடாமல் இரவு 9 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புது வருடத்தின் முதல் விடுமுறை நாளான நேற்று முன்தினம் அனுமந்த ஜெயந்தி என்பதால் பக்தர்களின் கூட்டம் காலையிலிருந்து இரவு வரை அலை மோதியது. கூட்டதை கட்டுப்படுத்தும் விதமாகவும் மற்றும் பாதுகாப்பு கருதியும் அச்சரக காவல்நிலைய காவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here