தஞ்சாவூர், மே. 30 –

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் சார்பு பொருள்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40% பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட் உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு உருளைகளை கொண்ட எண்ணெய் பிழியும் இயந்திரங்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.94,683, தென்னைமட்டை உரிக்கும் இயந்திரங்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.61,600, வாழைமட்டை நார் உரிக்கும் இயந்திரங்களுக்கு ரூ.52,000, சிறியவகை நெல் அரைக்கும் இயந்திரங்களுக்கு ரூ. 17,000,நெல்உமி நீக்கும் இயந்திரங்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.44,000, மும் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய ஆதார்கார்டு, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், பாஸ்போர்ட் போட்டோ, சிட்டா அடங்கல், மும்முனை மின்சார இணைப்புடன் கூடிய 10 க்கு 10 அளவுக்கொண்ட இடம் உள்ளதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கொண்ட இயந்திரங்கள் தேவைப்படுவோர் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்தவர்கள்  தஞ்சாவூர் உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் எண் 15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர் – 613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாப்பேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களைச் சார்ந்தவர்கள் கும்பகோணம் உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலூகா, கும்பகோணம் – 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்கை சார்ந்தவர்கள் பட்டுக்கோட்டை உபக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை – 614 601 என்ற முகவரியிலும் அணுகி விண்ணப்பத்தினை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here